இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 7 அக்டோபர், 2010

பூசாவும் குழந்தையும்

வியாழன், 7 அக்டோபர், 2010
பிள்ளைக்கு சோறூட்டிய
தமிழ்த்தாய் ஒருத்தி
உண்ண மறுத்த குழந்தைக்கு
பேயைச் சொல்லி…..
கரடியைச் சொல்லி…
பூச்சாண்டியைக் காட்டி
சோறூட்டினாள்
உண்ண மறுத்தது குழந்தை.
தோற்றுப் போன தாய்
பூசா என்றாள்
வாயை அகலத் திறந்தது
பிள்ளை…….(பூசா என்பது இலங்கையில் உள்ள சிறைச்சாலை)

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket