இருத்தல் என் சுதந்திரம்

ஞாயிறு, 1 நவம்பர், 2009

ஊரின் நினைவுகளிலிருந்து

ஞாயிறு, 1 நவம்பர், 2009 0
ஊர்க் குருவி.

உயிர் பருகும் ஊர் நினைவில்
தினமும் உருக்குலைந்து போகிறதுமனது…….!
நடக்க இருக்க படுக்க என
சம்மந்தமில்லாமலும்
காரணமில்லாமலும்
மின்னல்கீற்றாய்
உசுப்புகிறது ஊர் நினைவு…

நான் நடக்கப் பழகிய தாய்மடியே….!
உன் மேனியில்
புரண்டு புரண்டு
ஊத்தை படிந்த என் தேகம்
இப்போதும்
அந்தப் புரள்வுக்காய் காத்துக்கிடக்கிறது…..

முன்பு காலால் மண்கிளறி
அதிலெழும் புழுதியெல்லாம்
மோந்து மோந்து மணப்பேன்
அந்தப் புழுதியெல்லாம்
என் சுவாசப்பைகளின் ஓரத்தில்
இறுகிப் போய் இருக்குமெனில....

சின்ன வயதில்
அம்மாவைக் காணாமல்
கோடிப் புறத்தில் பதுங்கி
மண் கட்டி திண்பேன்
அந்த மண்ணின் கட்டியெல்லாம்
இரைப்பையில் செரித்து
உடம்பெல்லாம் இரத்தமாய் ஓடுமெனில்…..

நானும் தம்பியும்
மண்ணில் உருண்டு
மணல் வீடு கட்டி விளையாடுவோம்
அந்த ஊத்தையெல்லாம்
என் தோலில் இப்போதும்ஒட்டியிருக்குமெனில்……

மண்ணோடு
ம்ஊரின் நினைப்போடும்
இந்தப் பிறப்பில் வாழ
இப்போதைக்கு
இவை போதும் எனக்கு…!
 
◄Design by Pocket