இருத்தல் என் சுதந்திரம்

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

யாதும் ஊரே யாவரும் கேளீர்..!

வெள்ளி, 17 செப்டம்பர், 2010
கால் நீட்டிப்படுக்க
ஒரு பலகைத் துண்டு…
காலை உணவுக்கு இரண்டு
ரொட்டித் துண்டு..
காற்று வராத அகதிக் கொட்டில்
வெளிச்சம் வரக் குப்பி விளக்கு.

மாதம் ஒரு முறை கூப்பன் அரிசி
மலிவுக்கறிக்கு வெண்டிக்காய்
மனது நிறைய ஊர்க்கவலை
இத்துடன் முடிந்து விடகிறது
வாழ்தல் மீதான ஆசை..!

நேற்றய பௌர்ணமிப் பொழுதில்
புத்த பெருமானுக்கு
பெரு விழா எடுத்தது எங்கள் தேசம.;
நாட்டில் சமாதானத்தையும்
சமத்துவத்தையும் ஏற்படுத்தியதால் புத்த பெருமானுக்கு
போதி பூஜை..!

ஆறு மணிக்கே தேசியக்கொடி
காற்றில் பறந்தது.
பூஜையின் முடிவில்
பலர் பேசிக் கொண்டணர்
எல்லோரும் இனிச்சமம்
யாதும் ஊரே யாவரும் கேளீர்..!

நேற்று பௌர்ணமி போயிற்று
இன்றய காலையிலும்
என் கண்களில் பட்டவை….
கால் நீட்டிப்படுக்க
ஒரு பலகைத் துண்டு….
காலை உணவுக்கு இரண்டு
ரொட்டித் துண்டு….
காற்று வராத அகதிக் கொட்டில்….
வெளிச்சம் வரக் குப்பி விளக்கு…!

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket